யார் சொன்னாலும் போக மாட்டேன் முடிந்தால் அனுப்புங்கள் – மஹிந்த ராஜபக்ஷ

தன்னை பதவி விலகுமாறு ஒவ்வொருவராகக் கூறினாலும் இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளாார்.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்போதுள்ள வரிசைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.