யாழில் இந்தியர்கள் கைது

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட விசேட அதிரடிப் படையினர் யாழில் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

சோதனையின் பிரகாரம், சுற்றுலா விசாவில் வருகை தந்த குறித்த இருவரும், நகை கடையில் வேலை செய்துள்ளனர்.

இதன்போது, பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, அவ்விருவரும் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நிலையில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.