யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை

கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதி காப்பாளர்களுக்கான பரிசோதனையானது நேற்றைய தினம், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், வைத்திய அதிகாரி தெரிவித்தார்.