யாழ். விமான நிலைய மேம்பாடுகள்: மீண்டும் பேச்சுவார்த்தை

யாழ்ப்பாணம் விமான நிலைய மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தியா-இலங்கை இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்தவாரமளவில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது, விமான நிலையத்தின் வளர்ச்சியில் இந்திய முதலீடு, இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.