ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவு

இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 300 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அந்த நிர்வாகிகள் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

தி.மு.க.வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் ராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் செந்தில்வேல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த சுப்புராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.