வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற வைப்பதற்காக தமிழ் தரப்புடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை செய்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி மற்றும் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கூறியுள்ளார்.