ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு திடமானது

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சீனா, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது. 

மோதல் குறித்த பீஜிங்கின் நிலைப்பாட்டை விளக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே வாங் யீ மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்தார்.

உக்ரைன் நிலைமைக்கான காரணங்கள் சிக்கலானவை என்றும் ஒரே இரவில் நடந்ததல்ல என்றும் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அமைதியும் பகுத்தறிவும் தேவை எனவும் மாறாக நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பது மற்றும் முரண்பாடுகளை தீவிரப்படுத்துவது அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழிகளில் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ளவும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து பாதுகாக்கவும் வாங் யீ அழைப்பு விடுத்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் நியாயமான பாதுகாப்பு கவலைகளுக்கு நாங்கள் இடமளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகள், இப்பிராந்தியத்தின் நீண்ட கால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.