ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.