ரூ. 200 கொடுப்பனவுக்கு சட்டக் கட்டமைப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ. 200 நாளாந்த வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொடர்பில் குழு பல முக்கியமான அவதானிப்புகளை முன்வைத்தது:

  • சட்ட அந்தஸ்து: தற்போதைய கொடுப்பனவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாமல், தனியார் கம்பனிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது எந்த நேரத்திலும் நிறுத்தப்படக்கூடிய அபாயம் உள்ளதால், இதற்கு நிலையான சட்டக் கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
  • நிதிக் ஒழுக்கம்: பொது நிதியைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் ஊடாகச் சம்பளம் வழங்குவது நிதி ஒழுக்கத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டது.
  • EPF/ETF பங்களிப்பு: இந்த ரூ. 200 தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) கணக்கிடப்படுவதில்லை. இது சட்ட ரீதியாக ஏற்புடையதா என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
  • வகைப்படுத்தல்: 2026 வரவுசெலவுத்திட்டத்தில் இது ‘அபிவிருத்தி மானியமாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உற்பத்தியை ஊக்குவிக்கும் உற்பத்தி ஊக்கத்தொகை’ என அழைப்பதே பொருத்தமானது என திறைசேரி தெரிவித்தது.