லொஹானுக்கு எதிராக நடவடிக்கை: பெரமுன

அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளில் மது போதையில் தனது நண்பர்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய நிறைவேற்று குழு கூடி கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என பெரமுனவின் பிரதான செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாஹர காரியவசம் தெரிவித்தார்