காட்டு யானை ஒன்று, வெள்ளிக்கிழமை (05) அதிகாலை மதவாச்சி மக்கள் வங்கிக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்து, வங்கியின் பிரதான கண்ணாடி கதவை உடைத்து, வங்கி வளாகத்திற்குள் நுழைந்து அதன் கூரையை சேதப்படுத்தியுள்ளது.