வலுகட்டாயமாக மணிவண்ணன் வெளியேற்றம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன், தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்க இன்று கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகம் மூடப்பட்டது

இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், மணிவண்ணனின் அலுவலகத்துக்கு முன்பாக ஆதரவாளர்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.