வலுக்கும் போர்: ஹமாஸின் பதிலடி கருத்து

இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்துவரும் நிலையில், ஹமாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் இசாத் அல் ரிஷக், “அயன் டோம் பற்றி பெருமை பேசிக் கொள்ளும் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தோற்றுவிட்டன. மத்திய கிழக்குப் பிராந்திய மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இஸ்ரேல் மூட்டிய நெருப்பு இஸ்ரேலை தாக்குகிறது. ஈரானின் பதில் தாக்குதல், ‘எந்த ஒரு அடாவடித்தனத்துக்கும் பதிலடி உண்டு, எந்த ஒரு அடக்குமுறைக்கும் தண்டனை உண்டு’ என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்