’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’

ஆளும், எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே ஒன்றாக செயற்படுவோம். ஆனால் எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை ஜனாதிபதியும், பிரதமரும் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

இலங்கை வங்குரோத்த நிலைக்கு தள்ளப்பட்ட நாடென்ற பெயரை பெற்றுவிட்டது.  கடந்த வாரத்தில் முள்ளிவாய்க்கலில் நினைகூரல் இடம்பெற்றபோது இராணுவத்தினர் அதனைத் தடுத்தார்கள். தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே அனைத்து மக்களும் ஒன்றுகூடி நினைக்கூருகிறார்கள். 

நேற்று காலிமுகத்திடலில் அனைவரும் ஒன்றிணைந்து புலிகள், இராணுவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்தார்கள். இதுவே மாற்றம் எனவும் தெரிவித்தார்.