வாசு­தேவ நாண­யக்­கார எதிர்ப்பு!

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பிர­த­ம­ருக்கு நிறை­வேற்று அதி­காரம் செல் ­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு இச்­ச­பையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் நேற்று புதன்­கி­ழமை கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா? தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா? என்­பது தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியும் தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் சில மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்கே இணக்­கப்­பா­டு­களை எட்­டி­யி­ருந்­தன.

எனினும் தற்­போது அந்த நிலை­மை­களில் குழப்ப நிலை­மை­களும் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக ஜனா­தி­ப­திக்கு காணப்­படும் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை நீக்கி அந்த அதி­கா­ரங்­களை பிர­த­ம­ருக்கு வழங்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கை­யி­லான செயற்­பா­டு­களை நாம் முற்­றாக எதிர்­பார்க்­கின்றோம். பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரங்­களை பகிர்­வ­தாக கூறி அவ்­வ­தி­கா­ரங்­களை பிர­தமர் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றில் கொண்டுவரப்படும் சட்ட மூலத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் ஒருபோதும் கிடைக்காது என்றார்.