வாள்வெட்டு ரௌடிகளை குறிவைத்து அதிரடி வேட்டை முப்படையினரும் இணைந்து யாழில் நடவடிக்கை!

இதற்கமைய யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து அதிகாலை முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்திருந்தனர்.

யாழ்மாவட்டத்தில் வாள்வெட்டு ரௌடிக்குழுக்கள், சமூக விரோதக் குழுக்களின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த வேண்டுமென, அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றிவளைப்பு, ரோந்து, வீடுகள் சோதனையிடப்பட்டு வருகிறது.

நன்றி ஆசிரியர் தமிழ் பக்கம்