திருகோணமலை, திருக்கடலூர் மீனவர் வாழைச்சேனை மீனவர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும்,தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தும் திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியை மறித்து மீனவர்கள், வியாழக்கிழமை (05) காலை 8 மணி முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.