மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிறிலிய’ என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஜனவரி 27ஆம் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ ஜனவரி 27ஆம் அன்று பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாவில்லை.
இதனால் பெப்ரவரி 3ஆம் திகதி காலை 09.30 மணிக்கு பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அமைப்பு விடுக்கப்பட்டது.