ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேன அம்பகமுவ பகுதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் குறைபாடுகளுடன் பஸ்களை இயக்கிய 5 இ.போ.ச பஸ்கள் மற்றும் 6 தனியார் பஸ்களின் 11 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.