விபரீத முடிவு எடுத்த 700 இந்திய மாணவர்கள்; அச்சத்தில் இந்திய அரசு

இந்நிலையில் உக்ரேனின் சுமி நகரில் சிக்கி தவிக்கும்  இந்திய மாணவர்கள் தமது உயிரை காப்பாற்றுவதற்காக , சுமி நகரில் இருந்து தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகருக்கு 600 கிலோ மீற்றர்  தூரத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் ” நாங்கள் அச்சம் அடைந்துள்ளோம். நீண்ட நாட்கள் இங்கு காத்திருந்தோம். இனியும் இங்கு  இருக்க முடியாது. எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

  இங்கு கடுமையான குளிர்,மற்றும்  உணவு பற்றாக்குறையால் துன்பப்பட்டு வருகின்றோம் கடந்த ஒரு வாரமாக மின்சாரம், இல்லாமல் தவித்து வருகிறோம்.

இதனால்  சுமி நகரில் இருந்து தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகருக்கு 600 கிலோமீற்றர் தூரத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டுள்ளோம் . எல்லையில் உள்ள அதிகாரிகள் எங்களை மீட்டு அழைத்து செல்வார்கள் என்று நம்புகின்றோம்.

 எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசும், இந்திய தூதரகமுமே பொறுப்பு” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  மாணவர்களின் இவ் விபரீத முடிவால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு  ‘அவசரப்பட்டு வெளியேற வேண்டாம்‘ என்று அவர்களை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.