இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
