விவாதத்துக்கு நானும் தயார்: அன்புமணி சவாலை ஏற்றார் உதயநிதி

நீங்களோ, உங்கள் மகனோ என்னுடன் விவாதத்துக்குத் தயாரா என அன்புமணி ராமதாஸ் விடுத்த சவாலை ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்.தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து நேற்று அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது ஸ்டாலின், உதயநிதி குறித்து கடுமையாக சாடினார்.