தன்னால் கண்டெடுக்கப்பட்ட மணி பேர்ஸ் ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.