வெள்ளவத்தையில் சோகம்: மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை, ராம கிருஷ்ணா பிளேஸில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.