வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்

புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா, இதனைக் கூறியுள்ளார்.

இந்த படகு சேவைக்காக நியாயமான கட்டணமே பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் என்றும், முழுமையான பலன் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.