வேலைக்குச் செல்லும் சிறுவர்கள்; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

10 தொடக்கம் 12 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் தினந்தோறும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாக புலனாய்வுத் தரவுகளின் படி தெரிய வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவவ்கையான குற்றங்களைப் புரிவோரை விரைவாக தண்டிக்க தேவையான சட்ட வரைவுகளை உருவாக்க அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தங்களுடைய பிள்ளைகள், வறுமை காரணமாக வேலைக்கு அனுப்பப்பட்டு அங்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தங்களது பிள்ளைகள், யாராலும் துன்புறுத்தப்படுகிறார்களானால், பெற்றோர்கள் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.