ஹட்டனில் கட்டுமான அறிவிப்பு: மக்களே உஷார்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மாநகர சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் இல்லாமல் ஹட்டன்- டிக்கோயா நகர சபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்க ஹட்டன்- டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.