ஹிருணிகாவின் பேச்சு ……. (தமிழில்)

எடிட் செய்யப்பட்ட ஒலி வடிவங்கள். வேறு குரல்களை திணித்த ஒலி வடிவங்கள் என பல வெளிவந்துள்ளன. இவை குறித்தே பேச உள்ளேன். இந்த தூள்காரர்கள் , தூள் ஊடகங்கள் முழு நாட்டுக்கும் ஹிருணிகா குறித்து தவறான ஒரு கருத்தை பரப்புரை செய்துள்ளது.

நான் அரசியலில் இருந்தாலும் ஒன்று – இல்லாவிட்டாலும் ஒன்று. ஒரு பெண்ணாக நடப்பவை குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு பகிர உள்ளேன். யாரும் எனக்காக பேச முன்வராத போது நானே எனக்காக நானே பேசி, வாதாடி உண்மைகளை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இன்று எல்லோரும் என்னை நோக்கி கற்களை எறிகிறார்கள். இரவு குடித்து விட்டு வந்து அவர்களது மனைவிமாரைத் தாக்கும் , மனைவியரது முகத்தை சுவரில் மோத வைக்கும் சிலரும் , தங்களது கணவன்மாரின் பாலியல் இயலாமை குறித்து பேசுவோரும், நான் எனது கணவரை ஏமாற்றியதாக சொல்கிறார்கள். தவிர ஆண்களுடன் கும்மாளம் போடும் சில பெண்களும் கூட சேர்ந்து எனக்கு ரஞ்சனோடு தொடர்பு என சொல்கிறார்கள்.

நான் இங்குள்ளோரைப் பார்த்து கேட்கிறேன். இங்குள்ள அனைவரும் பரிசுத்தமானவர்களா? இந்த கறுப்பு மனிதர்கள்தான் , அடுத்தவர்களது வெண்மையை – பரிசுத்தத்தை தேடுகிறார்கள். இங்கிருக்கும் கரும் புள்ளிகள் இப்போது பரிசுத்தமானவர்களாகிவிட்டனர். இவர்கள் எல்லோரும் தனி ஒரு பெண்ணை வளைத்து நின்று கல்லெறிகிறார்கள்.

இப்படி 1 – 2 அல்ல, ஒலி நாடாக்கள் 100 வந்தாலும் நான் இறந்த பின்தான் என் வாயை மூட முடியும். அதுவரை என் வாயை அடக்க முடியாது.

இந்த தூள்காரருக்கு எதிராக , இந்த அரசின் குற்றவாளிகளுக்கு எதிராக , வெளியில் விடுதலை செய்து எடுக்கப் போகும் துமிந்த சில்வாவுக்கு எதிராக , அவரின் அண்ணன் ரெனோ சில்வாவுக்கு எதிராக , அன்று பலமே இல்லாது மோதிய எனக்கு …… மகிந்த ராஜபக்சகளோடு மோதிய எனக்கு …. அன்று பலமில்லா காலத்தில் துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்ப முடிந்த அதே முதுகு பலம் இன்றும் என்னிடம் உள்ளது.

எனக்கு ஏன் சேறடிக்கிறீர்கள்? நான் திருடினேனா? நான் தூள் விற்றேனா? மணல் கடத்தினேனா? விபச்சார விடுதி நடத்தினேனா? எதுக்காக சேறடிக்கிறீர்கள்?

எனது சம வயதையுடைய ஒரு நண்பனோடு தொலைபேசியில் விவாதித்திருக்கிறேன். நாங்கள் பேசியதை எடிட் செய்து – இடை குரல் சொருகல்களைச் செய்து, அவற்றை பகிரங்கமாக வெளியிட்டு எனக்கு சேறடிக்கிறார்கள். அப்படியில்லாமல் நான் திருடியதோ , கொலை செய்ததோ , தூள் விற்றோதோ இல்லையே?

நாட்டில் உள்ள மக்கள் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நேரத்தில் , இந்த ஒலி நாடாக்களை ரசித்து ரசித்து கேட்கிறார்கள். அவற்றை கேட்டுதான் பசியை தணித்துக் கொள்கிறார்கள்.

நான் நேற்று சீஐடியினரிடம் புகார் அளித்தேன். 2007ல் பிறப்பிக்கப்பட்ட கணனி குற்றவியல் சட்டத்துக்கு அமைய 27/4ல் இருவரது தொலைபேசி உரையாடலை அவர்களது அனுமதியின்றி பதிவு செய்வது அல்லது வைத்திருப்பது அல்லது விற்பது அல்லது வெளியிடுவது குற்றச் செயல் என உள்ளது.

இன்று ஹிரு – தெரண – ரூபவாஹினி – ஐடிஎன் எனும் இந்த தொலைக்காட்சிகளுக்கு எதிராக நான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளேன். இந்த ஊடகங்களிடம் 1 பிலியன் கேட்டு வழக்கு தொடுக்க உள்ளேன். முடிந்தால் மோதிப் பாருங்கள். யார் வெல்வது என பார்ப்போம். இவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டவை என நான் ஒப்புவிப்பேன். 1 பிலியன் நஸ்ட்ட ஈடு கேட்பேன். அவர்களிடமுள்ள பணம் தூள் விற்ற பணம். அதை வாங்கி ஏழைகளுக்கு பகிர்வேன். எனக்கு ஒரு சதமும் தேவையில்லை.

இவை எப்படி வெளிவந்தது என சொல்கிறேன். போலிசார் ரெனொவிடம் கொடுத்தார்கள். ரெனோவுக்கு போலீசார் விற்றார்கள். இராஜ் என ஒரு உதவாக்கரைக்கு உல்லாச பயணத்துறையை மேம்படுத்தும் டைரக்டர் பதவியொன்றை கொடுத்துள்ளார்கள். அவனிடம் ரெனொ அதையெல்லாம் கொடுத்தான். அவனோடு 15 பேர் வரை உள்ளார்கள். அவனது நொயிஸ் டிவீ செய்யும் அறைகளிலிருந்து கொண்டு , இப்போது கூட ……. 24 மணி நேரமும் அந்த ஒலிகளை எடிட் செய்து சமூக வலைத்தலங்களில் பரப்பி வருகிறார்கள்.

ரஞ்சன் என்னோடு மட்டுமல்ல , இங்குள்ள 225 ல் பாதிக்கு மேற்பட்டோரோடு ரஞ்சன் பேசியுள்ளார். வெளியே வருவது என்னுடையவை , வெளியே வருவது ஷானியுடையவை , பத்மினி ரணவக்கவினுடையவை. ஏன் ?

இப்போது நடக்கும் பிரிசின் பிரேக் 2 எனும் நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் நாங்கள் …….. இவற்றை வெளியிட்டு மக்களிடம் ஒரு மன நிலை மாற்றத்தைக் கொண்டு வர முயல்கிறார்கள். துமிந்த பேபி. துமிந்த அப்பாவி. துமிந்த நடந்து போகும் போது எனது அப்பா தானே தனக்கு வெடி வைத்துக் கொண்டார். அப்படி ஒரு கதையை சோடிக்கப் பார்க்கிறார்கள். இங்கே பிரதான கதாபாத்திரங்கள் நாங்கள் ……. எனக்கு ஏதாவது வழக்கு இருக்கிறதா என பார்க்கிறார்கள். கைது செய்ய வழி தேடுகிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை.

தொடரும் ….