“13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது”

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் பெரும்பாலானவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட்டுவந்தனர். என்றாலும் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கற்பனையான, பிழையான பிரசாரங்களால் அவர்கள் மனமாற்றப்பட்டனர். தமிழ் மக்களின் வாக்குகள் பயனற்றுப்போயுள்ளதை தற்போது அவர்கள் உணர்ந்துவருகின்றனர். அதனால் எதிருவரும் பொதுத் தேர்தலில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

(Veerakesary)