2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரசபையினால் 15.01 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது.