தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய மிருகக்காட்சிசாலையின் உதவி பணிப்பாளர் எச்.ஏ.டி.பி. சமன்மாலி, தெஹிவளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கடந்த 4 ஆம் திகதி அதிகாலையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.