4 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்த  ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (3) மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு வந்திறங்கி கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.