40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை

இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென அறிக்கையொன்றில் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட்ட பெறுமதி வாய்ந்த பொருள்களை இழந்ததாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக நேற்று முன்தினம் உயர்ந்திர்ருந்தது.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட சிறிய, மத்தியதர புவியதிர்ச்சிகளால் கொங்கோ தலைநகர் கோமாவிலுள்ள கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தது.