5 தசாப்தங்களின் பின் சர்வதேச விமான சேவை

ஆரம்பத்தில், 50 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானம் கொழும்புக்கும் மாலைதீவுக்கும் இடையே முதலில் பறக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சேவைகள் தொடங்கியதால் இரத்மலானையில் இருந்து இயங்கிய பிராந்திய சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டன.

இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.