“QRக்கு அவசரமில்லை’’ அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு

நாடு எதிர்கொண்டிருந்த எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததாலேயே கடந்த காலங்களில் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது எரிபொருள் விநியோகத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டிற்குத் தேவையான போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அத்தகைய தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply