அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்

தந்தை செல்வாவால் கவரப்பட்டவர் அவரின் அழைப்பை ஏற்று தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக வந்தார். பார்கின்ஸன் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த தந்தை செல்வா சுறுசுறுப்பாக செயற்பட முடியாதவராக இருந்த போது கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டார், இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தமிழ் எதிர்கட்சி தலைவர் அவர்தான், இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார்,பன்மொழி ஆற்றல் மிக்கவர் அனைவராலும் மதிக்கபட்டவர் ,அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது.
தமிழகத்திற்கு அவர் வரும்போது அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் போட்டியே இருந்தது, “நாவலரே வருக..” என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கருணாநிதி.

நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்துச் சென்றார் எம்ஜிஆர், இலங்கை தமிழர்கள் பிரச்னையை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான்.

இலங்கை தமிழர்கள் பிரச்னையை இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர், அமிர்தலிங்கம் இல்லையென்றால்போராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ இல்லாமல் போயிருப்பார்கள்.
இந்திராகாந்தி 1984 குடியரசு தின விழாவின் போது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார்,அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு கொடுத்து ஜெயவர்த்தனேவினை பயமுறுத்தினார்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்
அவர்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுது புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் ஏனையோர் துரோகிகள் எனக்கூறி சுட்டுக்கொன்று கொண்டு இருந்தார்கள்.
நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள்
ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு தேன் நிலவு கொண்டாடினார்கள்.

பிரபாகரன் பற்றி ஒருமுறை இவ்வாறு கூறினார் அமிர்தலிங்கம், தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.

இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல…”
அவ்வளவு தான்,3புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து விட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்.

இந்நிலையில் 13 07 1989 அன்று புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களவன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம் “அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை” என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம், அதன் பின் அமிர்தலிங்கத்துடன் புலிகள் பேசுகின்றார்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், புலிகள் குடிக்கின்றார்கள்

கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவர் தாலிபறிக்க நினைப்பார்களா?

புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? ஏது விசுவாசம்?

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்கத்தின் மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான். அவரைக் கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு புலிகள் ஓடினர்.ஆனால் அந்த சிங்களவன் கொலையாளிகளை பின்னால் விரட்டி சென்று சுட்டான் ,ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களவன்.

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரான அந்த சிங்களவன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை
எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களவன் அவன்?அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான்.

மாத்தையா அமிர்தலிங்கத்தை துரோகி என்று கூறி மரண தண்டனை கொடுக்கபட்டது என பகிரங்கமாக கூறினார், பிராபகரன் உத்தரவுப்படி அந்த கொலையினை மாத்தையா தனது மெய்ப்பாதுகாவலரை வைத்து செய்தார் ,பின்னர் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், மாத்தையாவும் கொல்லபட்டார்.

வடமராட்சியில் தங்களை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினையும் கொன்றார்கள்,
எப்படிபட்ட நன்றிமிக்கவர்கள் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவர்களை எல்லாம் மண்டையில் போட்டுத்தள்ளினார்கள்.அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்.

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ்
அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்.

இலங்கை கொழும்பில் பாதுகாவலர்கள் , குண்டுதாரியான சைக்கிளில் வந்த பையனை தடுக்க, தடுக்காதீர்கள் அவனை என்னிடம் பேச விடுங்கள் எனக் கூறி பையனை தன் அருகே அழைத்தார் பிரேமதாசா,அந்த சதிகாரனும் பேசிப் பேசியே செத்தான்.

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம்.அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர். புலிகளின் பயிற்சி அப்படி , நம்ப வைத்து கழுத்தறுப்பது என்பது அவர்களுக்கு கை வந்த கலை.

இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌.

இன்று அமிர்தலிங்கத்தின் இறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் இறந்த நாள்.

இலங்கை தமிழர்களுக்காக உயிர் கொடுத்து ராஜிவினை அன்றே எச்சரித்தார். இலங்கை தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத நபர் அமிர்ந்தலிங்கம், அந்த பெருமகனை அன்றொரு நாள் சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது பாடசாலை நண்பனான தம்பிராஜா சுகுணராயிற்கு எனது நன்றிகள்.

திரு அமிர்தலிங்கம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.