அல்பிரட் துரையப்பா

1982 இல் தொழிற்பயிற்சிக்காக யாழ் கட்டிட திணைக்களத்தில் சேர்ந்தேன்.அப்போது நாவாந்துறை பகுதில் ஒரு பொது நூலகம் கடும் காற்றினால் சேதமடைந்ததாக தகவல்கள் வந்தன.இதைப் பார்வையிட கட்டிட திணைக்கள ஊழியர்களுடன் நானும் போனேன்.அவர்கள் பார்வையிட நான் அங்கு நின்றவரகளுடன் உரையாடினேன்.

அப்போது அவர்கள் சொன்னார்கள்.முன்பு எல்லாம் நீங்கள் இந்த இடத்துக்கே வரமாட்டீர்கள்.நகர குப்பைகள் அனைத்தும் இங்கே குவிந்து இருக்கும்.மணம் தாங்கமுடியாது .

அல்பிரட் துரையப்பா மேயராக வந்தபின்னர் ஒரு நாளைக்கு அறுபது உழவு இயந்திரங்கள் மூலம் இந்த குப்பை மேட்டை திருத்தி நிலமாக்கினார்.அதன் அருகே பிரேமதாசா அவர்களின் நூறு வீட்டுத்திட்டத்தை காட்டினார்கள்.அதுவும் துரையப்பாவால் செப்பனிடப்பட்ட குப்பை மேடு.இப்போது அழகான நிலம் என்றார்கள்.இந்த நூலகம் கூட அவர் ்தயவில் கட்டியதுதான் என்றார்கள்.

நான் கேட்காமல் அவர்களாக சொன்ன தகவல்.இப்படிப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்டதே யாழ் நவீன சந்தை.அடுத்து வந்த மேயர் இராசா விசுவநாதன் அவர் திறந்து வைத்த நினைவுக் கல்லை அகற்றி தனது அரசியல் நாகரீகத்தை காட்டினார்.

வட கிழக்கு மாகாண சபை யாழ் பல்கலைக் கழகத்துக்கு ஒரு பஸ் அன்பளிப்பு செய்தபோது புலிகள் அதை எரித்து வெற்றியாக கொண்டாடினார்கள்.அழிவிலே மகிழுகின்ற அழிவைக் கண்டு மகிழ்கின்ற கீழ்த்தரமான நாகரீகம் எப்போது மாறும்.

துரோகி என்று சுட்டுக்கொல்லப்பட்ட துரையப்பா பல சேவைகள் செய்தவர்.அவரின் சேவையின் அடையாளங்கள் அழியவில்லை.யாராலும் மறுக்க முடியவில்லை.ஆனால் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள்?

பலருக்கு இந்த உண்மை கசக்கும் ஆனாலும் இதுதான் நிஜம். இன்று வரை முறுகண்டியில் முறையான கழிவறை இல்லாத நிலமைதான் தொடர்கின்றது வவுனியா பஸ் நிலையம் சொல்லத் தேவை இல்லை. இதற்கு சிலர் மக்களுக்கு தூய்மையாக பாவிக்க தெரியவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை போட்டு தப்பிக் கொள்கின்றனர். இதில் மிச்சிறிதளவு உண்மை இருந்தாலும் ஈத தாம் செய்த தவற்றை மறைக்க முன்னிறுத்தும் நோண்டிச்சாட்டு. வட மாகாணசபை என்ற ஒன்று இருக்கின்றது கச்கூசைத்தானும் கட்டலாம்தானே…?

(விஜய பாஸகரன் உடன் இணைந்து  சாகரன்)