இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics)பகுதி – 4


(அ. வரதராஜா பெருமாள்)


அரசு சார்ந்தோர்க்கு தாராளங்கள் மக்கள் முதுகில் ஏற்றும் சுமைகள்

12. தாராளவாத பொருளாதாரக் கொள்கையானது, உற்பத்திகளும், விற்பனைகளும், ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும், விநியோகங்களும் கொள்வனவுகளும் முழுக்க முழுக்க சந்தை செயற்பாடுகளால் நடைபெற வேண்டுமே தவிர அரசின் செயற்பாடுகளோ தலையீடுகளோ அதில் இருக்கக் கூடாது என்கிறது. இதனை சொல்லித்தான் 1977ல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா திறந்த பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்தினார்.