இலங்கை தேர்தல் முடிவுகள்…. தேர்தல் முடிய முன்பே….

பெரும்பான்மை தேசியக் கட்சியாக மும் முனைப் போட்டி என்றாலும் இவர்களுடன் நான்காவதாக ஜேவிபியும் இணைந்திருக்கின்றது. அடிப்படையில் இடதுசாரி..? போக்குடைய சிறிலங்கா மக்கள் கட்சியும், வலதுசாரிப் போக்குடைய ஐ.தே கட்சியின் பிளவுபட்ட இரு கட்சிகளும் என்று தேர்தலை சந்திக்கின்றன.

மலையகம், வடக்கு, கிழக்கு என்று தமிழர் தரப்பில் ஒன்று இரண்டாகி அது தற்போது பலவாக உடைந்து கட்சிகளாகவும், சுயேச்சைகளாகவும் தேர்தலை சந்திக்கின்றன. முஸ்லீம் தரப்பு பெரும்பான்மை தேசியக் கட்சிகளில் அதிகம் இணைந்தும் முஸ்லீம் மக்களுக்கான தனித்துவமான கட்சிகளிலும் போட்டியிடுகின்றன. இது ஓரளவு மலையக மக்களுக்கும் பொருந்தி இருக்கின்றது. இது தமிழர் தரப்பில் இது அரிதாக காணப்படுகின்றது.

வெற்றி வாய்பை பொறுத்தவரை 113 உறுப்பினர்களைப் பெற்றால் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற நிலையில் மஹிந்த தலமையிலான சுதந்திர கூட்டமைப்பு 130 வரையிலான உறுப்பினர்களைப் பெற்று இந்த இலக்கை இலகுவாக அடைந்துவிடும். ஆனால் அது விரும்பும் மூன்றில் இரண்டிற்கு தடையாக விகிதாசார பிரநிதித்து தேர்தல் முறை அமையப் போகின்றது. தேர்தலின் பின்னரான பேரம் பேசலில் இந்த மூன்றில் இரண்டு சாத்தியமாகலாம்..?

இதற்கு அடுத்த படியாக சஜித்தின் மக்கள் சக்தி அதிக ஆசனங்களை 30 வரை பெற வாய்புகள் உண்டு ரணிலின் ஐ.தே கட்சி பலத்த அடி வாங்கினாலும் 15 வரை வெற்றி பெறும் ஜேவிபி கடந்த முறையை விட இம்முறை கூடவாக பெறும் என்று எதிர்பார்கப்பட்டாலும் ஒரு ஆசனம் குறைவாக பெறும் வாய்புகள் அதிகம்.

முஸ்லீம் உறுப்பினர்கள் அதிகமாக சஜித் கட்சியிலும் மிகக் குறைவாக மகிந்த கட்சியிலும் தெரிவு செய்யப்படுவர். மலையகத்தில் இவ்விரு கட்சிகளும் சமமான வாய்வை கொண்டிருப்பர்.
தமிழ் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் இம்முறை இரு கட்சிகளும் தலா இரு ஆசனம் பெற்றால் அது அதிகம் கூடியதாக பார்க்கப்படலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 வரையில் பெற ஏனைய தேசியம் பேசும் கட்சிகள் தலா இரண்டைத் தாண்டுவதே கஷ்டம் அதுவும் அவை வடக்கில் மட்டும்.

ஏனைய ஈபிடிபி, தமிழர் விடுதலைக கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, சமத்துவக் கட்சி தலா ஒன்றை தமதாக்கி கொள்வதற்குரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக வெற்றிகளை தமதாக்கிய சில உறுப்பினர்கள் குறிப்பாக தமிழர் தரப்பில் தோல்வியை சந்திப்பர்.

பாரம்பரிய கட்சிகளுக்கு அப்பால் இந்த ஒன்று, இரண்டு என்று பிரதிநிதித்துவம் பெறும் கட்சிகளின் புதிய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அதிகம் கவனத்தை பெறுவர்… செயற்பாட்டை வெளிப்படுத்துவர். இங்கும் மஹிந்தாவின் ஆசீர்வாதம் தேவை இருக்கும்.

வடக்கு கிழக்கில் தமிழர் பெறக் கூடிய வெற்றி வாய்புக்களை கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் வெறும் எண்களால் குறிபிடுகின்றேன்.

1. யாழ்ப்பாண மாவட்டம்(யாழ்ப்பாணம், கிளிநொச்சி) : 4 + 1 + 1 + 1
2. வன்னி மாவட்டம்(மன்னார், வவுனியா, முல்லைத்தீவு) : 3 + 1 + 1+ 1
3. திருகோணமலை மாவட்டம்: 1 + 2 +1
4. மட்டக்களப்பு மாவட்டம்: 2 + 1 + 1+1
5. அம்பாறை மாவட்டம்: 1 + 2 + 2 + 1+ 1