உள்ளுராட்சி தேர்தல் எமக்கான தீர்வை பெற்றுத் தந்துவிடுமா?

உள்ளுராட்சி தேர்தலில் வென்றால் எமது கோரிக்கைகள் நிறைவேறுமா?

ஏன் இந்த முறன்டுபிடிப்பு? எப்போதும் நாம் ஒரே கொள்கையில் இயங்குவதாக கூறி விட்டுக்கொடுப்புகள் இன்றி இனைந்து போகாமல் தனித்து நின்று சாதிக்கப்போவது என்ன? கொள்கை தவறிப்பயணிக்கும் தமிழரசுக் கட்சியை கடிவாளம் போட்டு நிறுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடும் கட்சியின் மேதாவித்தனமானது மிகவும் சிறுமையானது.

தந்தை செல்வா காலத்தில் இருந்து சயிக்கிள் சின்னமானது ஒரு தோல்வியின் குறியீடாகவே தமிழ்மக்கள் பார்க்கிறார்கள். அதில் ஏலவே பயணிக்கமுடியாது அவ்வாறான சிந்தனையிருந்தால் நான் உங்கள் கூட்டுக்கு வருவதை மறந்துவிடுங்கள் என திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதை அவ்வேளையில் ஆமோதித்து விட்டு இறுதி நேரத்தில் சயிக்கிளில் பயணிக்க நினைப்பது அபர்த்தம்.

திரு ஆணந்தசங்கரி அவர்கள் தனது சின்னத்தை பொது சின்னமாக பாவிப்பதற்கு உடன்பட்டதோடு மட்டும்மல்லாது கட்சிக்கு தலா ஏள்வர் கொண்ட அணியை அமைத்து எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக செயல்படவும் முன்வந்தார். இவ்வாறான மாற்றத்துக்கு உடன்படும் கட்சிகளுடன் இனைந்து பணியாற்றும் போதே ஜனநாயகம் வலுப்பெறும் கடந்த கால தவறுகளை தூசிதட்டும் நேரம் அல்ல இது.

தமிழரசுக்கட்சியை பலமிழக்க செய்ய ஒரே கொள்கையுள்ள பல அணிகள் திரண்டாலே வெற்றிபெறமுடியும். இல்லையேல் பிற பெரும்பான்மை கட்சிகள் வடகிழக்கில் காலுண்ட நாமும் காரணியாவோம் அப்படி ஒன்று நடக்கவா திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரும்புகிறாரா?

கட்சியில் இனைந்தால் தேசியவாதி இல்லையேல் இந்தியாவின் உளவாளி என ஆருடம் கூறும் தம்பிகளே Row போன்ற அமைப்புகள் தமக்கு வேண்டிய வேலையை செய்ய நமது வீட்டு வாசல்படிக்கே வந்து செல்லும் நிலமையில் வடகிழக்கு மாகாணம் இருக்கும் போது சென்னையில் வரவழைத்து சிந்தனையை மாற்றிவிட்டார்கள் என்ற அவசரகுடுக்கையை போன்று வதந்திகளை பிதற்றாதீர்கள்.

நீங்கள் யாதார்த்தமாக எந்த சிந்தனையையும் முன்னேடுக்க வேண்டும். எமக்கு நட்புக்கரம் நீட்டும் பலமான நாடுகளுடன் எமக்கான இலக்கை அடையும் வரை பகைக்காமல் நட்பு பாராட்ட வேண்டிய அவசியம் மறுதலிக்கமுடியாதது. அதில் அவர்களின் பூலோக நலன்களும் அடங்கியிருக்கலாம் அதை நாம் தவிர்த்து பயணித்தால் எம்மினம் பாரிய வரலாற்று தோல்வியை மட்டும்மல்ல சுயத்தையும் இழக்கும்.

மீண்டும் ஒரு ஆயுத போருக்கு தாயகத்தில் வாழும் தமிழர்கள் இறங்கமாட்டார்கள். அவ்வாறு இறங்கினால் இன்னும் இருபது வருடத்தில் மாற்று இனம் எம் மண்ணை ஆளுவதற்கு நாம் வழிசமைப்பதாக முடியும். இது எம்மக்களுக்கு புரியும்.இவ்வாறான சூழ்நிலையில் எம்மால் முடிந்தளவு உலக ஓட்டத்துடன் இனைந்து எம்மக்களுக்கு ஒரு உரிமையுடன் கூடிய உயர்ந்த அதிகாரத்தை பெற்று கொள்ளவேண்டும்.

தமிழரசுக்கட்சியானது கிடைத்த சந்தர்பங்களை தவறவிட்டு ஆளும் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதாலயே தலைமை மாற்றத்தை வேண்டி ஒரு மெகா கூட்டணியை ஸ்தாபிப்பதற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் பல விட்டுக்கொடுப்புகளை கொடுத்து ஒரு ஆக்கபூர்வமான அணியை உருவாக்க அல்லும் பகலும் அயராது உழைக்கும் போது வறட்டுத்தனமான கோரிக்கைகளை முன் வைப்பது யாரும் ஏற்கமுடியாத விடயம்.

எம் மக்கள் தமிழரசுக்கட்சியை எதிர்பது ஆளும் கட்சியுடன் இனைந்து உரிமையை பின்தள்ளி சலுகை அரசியலுக்கு சென்றமையே. அவர்கள் அதற்காக அரசுடன் பேசுவது குற்றமென்று எங்கும் கூறவில்லை.
திரு சித்தார்த்தன் 2009 வரைக்கும் புலி எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டவரே அவரை போன்று இறுதிவரை புலி எதிர்ப்பில் இருந்து விட்டு இறுதியில் கூட்டமைப்புடன் இனைந்த போது மக்கள் கடந்தகால தவறை பின்தள்ளி அவரை அதிகூடிய வாக்களித்து வெற்றி பெற வைத்ததை கருத்தில் கொள்ளவும்.

ஒரு வாதத்துக்கு எடுத்தால் அவ்வாறான பெரும் தவறுகளை ஆணந்தசங்கரி ஐயா செய்யவில்லை. ஏன் சம்பந்தன் ஐயா போன்று தமிழ் மக்களின் அமோக வாக்குகளை பெற்று விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் என்று எங்கும் கூறியதாக நான் அறியேன்.

யாதார்தமாக சிந்தியுங்கள் நிகழ்கால தவறுகள் எதிர்காலத்தை பாழ்படுத்தக்கூடாது.

(ஸ்ரீரங்கன்)