உள்ளுராட்ராட்சி மன்ற தேர்தல் – 2018

மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், சமூக பொருளாதார அபிவிருத்தியையும் முன்னிறுத்துவோம்

பொதுமக்களின் அடிப்படை நலன்களுக்கு சேவையாற்ற,
ஊழல் மோசடிகளில்லாத உள்ளுராட்ராட்சி சபைகள் உருவாக,
ஊர்மனைகள் நோக்கி; பொருளாதார முன்னேற்றங்கள் பரவ,
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட, பராமரிக்கப்பட,
எமது தேசமெங்கும் சுத்தமும், சுகாதாரமும், பசுமையும் நிலவ!

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்ராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக வழங்கும் உறுதிமொழிகள்:

தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதையும், மாகாணசபைகளுக்கு அதிகபட்சமான அதிகாரப்பகிர்வை பெறுவதையும், இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் அடிப்படையான உரிமைகளை நிலைநாட்டுவதனையும், அனைத்து இனங்களுக்கும் இடையில் சமத்தவம் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் சகோதரத்துவ முன்னேற்றங்கள் அடைவ தையும், கடந்தகால யுத்தத்தின் போது விளைந்த அநீதிகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளுக்கும் மற்றும் மானுட நீதிக்கும் முரணான சட்டங்களை இல்லாதொழிப்பதை உறுதிப்படுத்துவதையும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி அடிப்படை அரசியல் கொள்கையாக கொண்டிருக்கிறது.
உள்ளுராட்சி சபைகள் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளோடு தொடர்பான சேவைகளை ஆற்றவும், அவை தொடர்பான அபிவிருத்திகளை மேற்கொள்வ தற்கும் உரிய நிறுவனங்களாகும்.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியானது அதனது அரசியல் குறிக்கோள்களை அடை வதற்காக அயராது உழைக்கின்ற அதேவேளை உள்@ராட்சி மன்றங்களுக்கு உரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்ட உறுதி மொழிகளை இங்கே வழங்குகிறது.

01. உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்படும் சேவையாளர்களையே உள்@ராட்சி சபைகளில் மக்களின் பிரதிநிதிகளாக்குவோம்;
02. உள்@ராட்சி மன்றங்கள் எதிலும் ஊழல் மோசடிகள், அதிகார துஸ் பிரயோகங்கள் அற்ற நிலைமைகளை உறுதிசெய்யவும், அனைத்து அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியனவற்றை நிலைநாட்டவும் வேண்டி யன செய்வோம்;
03. உள்@ராட்சி நிர்வாகங்கள் அனைத்தும் மக்களோடு பண்பாகவும், சேவை மனப்பான்மையோடும் செயற்படும் நிலைமையை விருத்தி செய்வதற்கு ஆவன செய்வோம்;;
04. எமது பிரதேசங்கள் குப்பை கூழங்கள் அற்றவையாகவும், நாற்ற மெடுக்கும் சாக்கடைகள் அற்றவையாகவும், நுளம்புத்தொல்லைகள் இல்லாதவையாகவும் இருப்பதற்கு அவசியமான சுகாதார நடவடிக் கைகளை உறுதிசெய்வோம். மேலும் குப்பை கழிவுகளை வகைப் படுத்தி அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அவற்றை சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்புகள் எற்படா வண்ணம் பயன்தரும் வகையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்
05. சந்தைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் தரமான, சுகாதாரமான சேவைகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் அனுகூலமான ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டாயமாக்க வகைசெய்வோம்
06. ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நல்ல குடிநீர் போதிய அளவு கிடைக்க வழிசெய்வோம். அத்துடன் நீர்வளங்களை பேணிப்பாதுகாக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
07. கவனிப்பாரற்றுக் காணப்படும் உள்@ர் வீதிகள் அனைத்தும் புனர் நிர்மாணம் செய்யப்படுவதை உறுதிசெய்வோம்.
08. நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலும், இருந்த இடம் தெரியாமல் அழிவடைந்தும் காணப்படுகின்ற வடிகால்களை புனரமைத்து மழைவெள்ளப் பாதிப்புக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்
09. கட்டாக்காலி விலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை- பாதிப்புக்களை தடுப்பதற்கு வேண்டியன செய்வோம்.
10. பொதுமக்கள் அச்சமின்றி இரவு நேரங்களில் நடமாடுவதற்கு ஏற்ப உள்@ர் வீதிகள் வெளிச்சம் கொண்டவையாக இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்வோம்.
11. திருட்டு மற்றும் வன்முறைகள் பற்றிய பயமின்றி மக்கள் நிம்மதியாக வாழ, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் சம்பந்தப்பட்ட அரச அமைப்புகள் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வதை உறுதிசெய்வோம்.
12 எமது எதிர்கால சந்ததியினருக்கும் உரிமையான மணல், நீர் மற்றும் வன வளங்கள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாது காப்போம் – பராமரிப்போம். மேலும், பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப எமது வளங்கள் நியாயமான முறையில் கிடைப்பதற்கு வேண்டியன செய்வோம்.
13. சிறுவர்களுக்கும் முதியவர்களுக்குமென கிராமங்கள் தோறும் பூங்காக்கள் அமையவும் – பேணப்படவும் ஆவன செய்வோம்
14. தாய் சேய் நலன்புரி நிலையங்கள் அவசியமான அடிப்படை வசதி களைக் கொண்டிருக்கவும், அவை திறம்பட சேவையாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
15. கிராமங்கள் தோறும் உரிய வசதிகளுடன் சிறந்த முறையில் முன் பள்ளிகள் செயற்படுவதற்கு வேண்டியன செய்வோம்
16. அனைத்து சனசமூக நிலையங்களும், நூலகங்களும் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றுவதற்கு அவசியமான வசதிகள் கொண்டிருக்க ஆவன செய்வோம்
17. உள்@ர்களில் உள்ள அனைத்து விளையாட்டுக்கழகங்களும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்குவதற்கு வேண்டிய வசதிகளை கொண்டிருக்க ஏற்பாடுகள் செய்வோம்.
18. மாதர் சங்கங்கள் உட்பட அனைத்து மக்கள் அமைப்புகளும் ஆற்றலுடன் செயற்பட ஆதரவுகளை வழங்குவோம்.
19. பொது வளங்களை பகிர்வதில் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ள மக்கள் பிரிவினருக்கு முறையான மலசல கூடங்களுடன் கூடிய வீடுகள் கிடைக்கவும், அவர்கள் வாழுமிடங்களுக்கு நல்ல வீதிகள் உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடைக்கவும் ஆவன செய்வோம்.
20. அனைத்து மயானங்களையும் இறுதிச் சடங்குகளுக்கான புனித மையங்களாகப் பேணுவதுடன் அவற்றுக்கான போக்குவரத்து பாதைகளை செப்பனிட்டு, அவற்றைச் சுத்தமாகவும், பசுமையாகவும் பேணுவதற்கு வேண்டியன செய்வோம்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுதிமொழிகள் நடைமுறையாக
உங்கள் வாக்குகளை மெழுகுதிரி சின்னத்திற்கே அளியுங்கள்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

Social Democratic Party of Tamils ( SDPT )