ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09

மக்களுடைய நம்பிக்கைகளைக் கட்சிகளும் தலைமைகளும் சிதைத்து விட்டன. இதனால், இப்பொழுது மக்கள் தலைமைகளை நம்பத் தயாராக இல்லை. கட்சிகளை நம்பத் தயாராக இல்லை. சின்னங்களை நம்பத் தயாராக இல்லை. இவற்றுக்கு வெளியேதான் தங்களுக்கான அரசியலை அவர்கள் தேடுகிறார்கள். உண்மையும் அதுதான். மக்களுக்கான அரசியல் என்பது கட்சிகளுக்கும் பாரம்பரிய சின்னங்களுக்கும் உளுத்துப்போன தலைமைகளுக்கும் வெளியேதான் உண்டு. இதை இன்னும் ஊடகங்கள் கண்டு கொள்ளாதிருப்பது அவற்றின் வரலாற்றுத் துயரமாகும்.

நாறி மணக்கும் பிணங்களுக்கு மணப்பெண் அலங்காரம் செய்து ஊர்வலம் விடுவதற்கே ஊடகங்கள் முயற்சிக்கின்றன. பாரிசவாதத்தில் முடங்கிப் போயிருக்கும் கட்சிகளை முண்டு குடுத்து தெருவிலிறக்குவதற்கு சிலர் படாத பாடுகளைப் படுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து சனங்கள் சிரிக்கிறார்கள். இன்று சனங்கள் சிரிக்கிறார்கள் என்றால், நாளை வரலாறு சிரிக்கும் என்றே அர்த்தமாகும்.

(Sivaraja Karunakaran)