எமது கிராம போராட்டத்தின் பின்

போராட்டத்தில், பலியான இரத்தினம் அவர்களுக்கு குழந்தை இல்லை.அவர் மனைவி இளம் வயதில் விதவையானார்.மீண்டும் மணம் முடிக்காமல் வெள்ளைப் புடவையுடன் விதவையாகவே வாழ்ந்தார்.அவரனது அண்ணனும் தங்கையுமே பக்க பலமாக இருந்தார்கள்.திடீரென விரக்தியுற்ற அவர் 1996 இல் தற்கொலை செய்துகொண்டார் .

இரத்தினத்தின் மைத்துனர் மாணிக்கம் இராசன் குடும்பத்துடன் கிளிநொச்சி நகரில் வாழ்ந்தார்.ஏற்கனவே வழக்கில் சிறை சென்று விடுதலையான இவரை அதே வழக்கை காரணமாக்கி பத்து வருடம் கழித்து 1978 இல் இரகசியப் பொலிசார், திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவரைக் கேவலப்படுத்தி மித்திரன் வீரகேசரி பத்திரிகைகள் மீண்டும் செய்திகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தன.முடிந்துவிட்ட வழக்கு என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் மகன் ஒருவர் கொஞ்சம் பக்குவம் இல்லாதவர். தகப்பனிடம் கோபித்து ஈ.பி.ஆர. எல. எப் இல் சேர்ந்தார் .இவர் விளக்கம் குறைந்தவர் என்பதால் அவர்கள் திரும்ப வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.தகப்பன் இவரை வீட்டிற்கு ஏற்கவில்லை. அஅயலக உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.எவனோ ஒருவனுடன் இந்தப் பையன் வாக்குவாதப்பட அவன் உளவாளி என புலிகளிடம் சொன்னான். புலிகளும் நம்பி இவரை மின் கம்பதில் கட்டி இடுப்பில் கிரனைட் வைத்து துப்பாக்கி காட்டி கிளிப்பை எடுக்கும்படி மிரட்ட அப்பாவியான அவன் அதை இழுக்க வெடித்துச் செத்தான்.

இன்னொரு மகன் தேசிய இராணுவத்துக்கு வலுக்கட்டாயமாக ஈ.என.டி எல் எப் ஆல் இழுக்கப்பட்டான்.இந்திய இராணுவம் வெளியேறிய பின் கொழும்பில், தப்பி நின்றான்.அவன் தாய் புலிகளிடம் நிலைமை எடுத்துச் சொல்ல, அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளித்து கூட்டிவர சொன்னார்கள். தாயும் நம்பி கூட்டிவர வ்வுனியா அருகே மறித்து கைது செய்தனர்.தாய் எவ்வளவோ கெஞ்சியும் கொடுக்கவில்லை .பின் கொலை செய்துவிட்டனர்.பின் பல்வேறு சம்பவங்களில் மற்ற பிள்ளைகளையும் இழந்துவிட்டார்.ஒரே ஒரு மகன் மட்டும் ஜேர்மனியில் வாழ்கிறார்

சின்னத்தம்பி செல்லத்துரை 2013 யூலை காலமானார்.வறுமையில் வாழ்ந்த போதும் துரோகிகளுடன் உறவாடாது வாழ்ந்தவர்.இவர் சங்கானை மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் நேரடி பங்கேற்றவர்.

இரத்தினத்தை காட்டிக்கொடுத்த பனியன் ராசன் 1977 இன கலவரம்வரை அநுராதபுரத்தில் வாழ்ந்தான்.இனக் கலவரத்தை அடுத்து யாழ்ப்பாணம் வந்தான்.பின் ஐ.தே.க. ஜாதிக சேவக சங்கத்தில் வ்வுனியாவில், இருந்தான்.எப்போதும் பச்சை சட்டத்தான்.சில வருடங்களின் முன் கனடாவில் இறந்தான்.

இரத்தினத்தை போராட்டக்களத்தில் தள்ளி பின் தமிழரசுக்கட்சியின் முகவராக போராட்டத்தின் எதிரியாக மாறிய நடராசா குடும்பம் செழிப்பாக அவுஸ்ரேலியாவில் உள்ளது.அவரின் மரணத்தின் கூலியாக்க் பதவி பெற்றவரும் அவுஸ்ரேலியாவில்.

சமூகத்தின் பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றும் எத்தர்களை இனியாவது புறக்கணிக்கவேண்டும்.

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவரக்கும் மரியாதை கண்டேன்.

(விஜய பாஸ்கரன்)