கொள்கையில்லா அரசியல்வாதிகளும் கொள்கையில்லா மக்களும்


(எம்.எஸ்.எம். ஐயூப்)

நூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது, 20 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டிலேயே, சர்வஜன வாக்குரிமை வேண்டும் என்ற கோஷம், இலங்கையில் சிறிதளவாக ஆரம்பித்து இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள், அதை ஆரம்பத்தில் மறுத்தனர். சர்வஜன வாக்குரிமையைப் பயன்படுத்துமளவுக்கு, இலங்கை வாழ் மக்கள் முதிர்ச்சியடைந்து இருக்கவில்லை என்பதே, அவர்களது வாதமாகியது.