‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை

ஐஸ்வரியா ராய் ஐ உலக அழகி ஆக்கி அதனைத் தொடர்ந்து நான்கு வரையிலான அழகிகளை உலகதரம் என்று காட்டி இன்று இந்தியாவின் மூலை முடுக்கொல்லாம் கக்கூசு இருக்குதோ இல்லையோ அழகு நிலையங்களை திறக்க வழிசமைத்து தமது அழகு சாதனபப் பொருள்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் உருவாக்கிய காப்ரேட் கம்பனிகளின் சுரண்டல் அரசியல் இந்த ‘உலக அழகியல்’ இற்குள் இருக்கின்றது.

ஜல்லிக்கட்டுத் தடை, மாட்டுவண்டிச் சவாரித் தடை என்ற காளை மாடுகளுக்கான ‘தடா’விற்கு பின்னாலும் இந்தியா, இலங்கை நாடுகளின் சாதாரண மக்களின் வாழ்வில் இணைந்து போன கால் நடைகளுடன் கூடிய விவசாய வாழ்வும் வளமும் தங்கியிருக்காமல் தன்நிறைவு கொண்ட வாழ்வை இல்லாமல் செய்து பாக்கட்டில் அடைத்த கொக்கா கோலா பிரான்ட் பாலை எதிர்பார்த்து நிற்கும் ஜேசி மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பாலை விநியோகிக்கும் சந்தையை பிடிக்க காத்திருக்கும் பல்தேசியக் கம்பனிகள் கண்டுபடித்திருக்கும் துரும்பு மிருகவதை என்று பசுவை வணங்கும் மக்களின் உணர்சிகளை மூலதனமாக்கி பீட்டா என்ற அமைப்பின் மூலம் செயலில் இறங்கியிருக்கும் ஜல்லிக்கட்டுத் தடை.

 
காளைகளின் இருப்பைக் கேள்விக் குறியாக்கி சுதேசிய பசுக்களின் இயற்கை கருத்தரிப்பிற்கான வாய்ப்புகளை குறைத்து சுதேசிய மாட்டினங்களை அழிக்கும் அரசியல் இதற்குள் ஒழித்திருக்கின்றது. பிறகு என்ன எமது நாட்டு வைக்கோல், ஒட்டு, புல்லு, கஞ்சி, தவிடு, புண்ணாக்கில் வாழமுடியாத ஜேசி மாடுகளின் இறக்குமதி, இதற்கான செயற்கை சினைப்படுத்தலுக்கு மருந்து இறக்குமதி, இவைகளுக்கான விசேட உணவு இறக்குமதி என்று வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலமை. கூடவே இந்த பால்தரும் குறைவான நோய் எதிர்ப்பு தன்மையினால் ஏற்படும் உபாதைகளுக்கான மருந்துகளும் இறக்குமதி. அப்அப்பா…. மிகப் பெரிய சந்தையை குறிவைத்திருக்கும் தடை இது. தமிழர் பண்பாடு கலாச்சாராம் வாழ்வியல் என்பவற்றுடன் ஜல்லிகட்டு பிணைந்திருக்கின்றதற்கு அப்பால் இந்த புதிய சந்தையை உருவாக்கும் சுரண்டல் பொருளாதார அரசியலை முடியடிப்பதற்காக ஜல்லிக் கட்டிற்கு ஆதரவழிப்போம். தமிழக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்.