திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி வரலாறு

திமுக கொள்கை சார்ந்த இயக்கமாகவும் அஇஅதிமுக தனிநபர் சார்ந்த இயக்கமாகவும் வளர்ந்து இன்று கொள்கை இல்லாமல் பாஜகவால் விழுங்கப்பட்ட தேமுதிக, பாமக போல ஆகிவிட்டது..
கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு சமூகக்கடமை உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் தங்களை வளர்த்துக்கொள்ள தடையாக இருந்த அரசியல் என்ன?

அஇஅதிமுக பாஜகவால் விழுங்கப்படும் அளவு திராவிட கருத்தியல், சமூக நீதி கருத்தியல் இல்லாமல் இருந்தும் அதை உணராமல் ஆதரித்து வந்தது ஏன்?

அதே நேரம் தன்னை அழிக்க வேலை பார்த்த காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்களை தாங்கி நிற்க திமுகவால் முடிகிறது என்றால்… அதன் காரணம் என்ன?

அரிசியல் அறிவியல் பார்வையில் ஆய்வு அவசியம் ஆகிறது…
ஓட்டரசியல் தாண்டி சிந்திக்க வேண்டிய சித்தாந்த அரசியல் பார்வையில் ஆய்வு தேவை.

அஇஅதிமுக உருவாக சிபிஐ ஒரு பெரும் பலமாக இருந்தது… அதே கட்சி இன்று பாஜகவாக உருமாறுவது எவ்வாறு இயல்பாக உள்ளது? தெளிவு பெற ஆய்வு தேவை.

எம்ஜிஆர் சாதி சமய பேதமற்ற அரசியல் பேசினார். அவர் தொடங்கிய கட்சி சங்கிகளின் முழு பிடியில்… இது எவ்வாறு சாத்தியம் ஆனது?
பிற்படுத்தப்பட்ட மக்களை அரசியல் அதிகாரத்திற்கு அழைத்துவந்த திராவிட கொள்கைகளை கைவிட்டு சாதிய படிநிலை பேச அதிகாரம் இல்லாத மக்களாக பிற்படுத்தப்பட்ட மக்களை மாற்றும் அரசியலுக்கு அஇஅதிமுக இரையானது எவ்வாறு..?