“தோழர் விசுவானந்தன்” நூல் வெளியீடு

“தோழர் விசுவானந்தன்”

நூல் வெளியீடு

November 19 Saturday

6:30 pm to 9 pm

Don Montgomery Community Centre

2467 Eglinton Avenue East Toronto

(beside Kennedy Subway Station and Kennedy GO Station)

416 573 3440

“ஆயுதங்களே அரசியல் என்றும் வேட்டுக்களே விடுதலை என்று எண்ணியவர் முன் விசுவானந்ததேவனின் அரசியலுக்கும் துப்பாக்கி வேட்டுக்கள் தானே விடையாக இருக்க முடியும்?” – மு.சி.கந்தையா

“பலமான அரசியல் செய்தியுடன் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்த முதல் வீதி நாடகம் என்ற பெயரைத் திருவிழா நாடகம் பெற்றதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் விசுவானந்ததேவன்” – மாவை நித்தியானந்தன்

“தாங்கள் சரியெனக் கண்ட இலட்சியத்துக்காக தங்களை அர்ப்பபணித்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் தியாகம் பயனற்றுக் கழிந்தது போல் விசுவானந்ததேவனின் அர்ப்பணிப்பும் பயனற்றுக் கழிந்தமை ஒரு வரலாற்றுத் துயரமே” – எம்.ஏ .நுஃமான்

“விசுவானந்ததேவன் பற்றிய நினைவுகளை மீட்டுப் பார்ப்பது காலத்தின் தேவையாக மட்டுமன்றி அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு ஆத்மரீதியான ஒரு தேவையாகவும் திருப்தியாகவும் கூட இருக்கின்றது”

– சண்முகம் சுப்பிரமணியம்

“மலையகத் தமிழர் பிரச்னையை ஆழ்ந்து கற்ற, அதன் மீது தீவிரமான அக்கறை காட்டிய முதல் ஈழப் போராளி விசுவானந்ததேவன் தான்.”

– எஸ்.வி. ராஜதுரை

விசுவானந்ததேவனை அழிக்க வேண்டுமென முடிவெடுத்து திட்டமிட்டு செயற்பட்ட சக்திகள் அவர் கொண்டிருந்த அரசியல் பார்வையையும் அதன் அடிப்படையில் கட்டியெழுப்ப எடுத்த செயற்பாடுகளையும் கண்டு பயந்தனர் என்பது தெளிவு” – சமுத்திரன்

“விசுவானந்ததேவனின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் மனதில் பெரும் துயரமாகவும் நெருடலாகவும் இருக்கின்றது.” – சிறீதரன்

இலங்கை மார்க்சிய – லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் முக்கிய செயற்பட்டாளரும், ‘தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்து வழிநடாத்தியவருமான தோழர் விசுவானந்ததேவன் மறைந்து முப்பது ஆண்டுகளாகின்றன. விசுவானந்ததேவனை நினைவுகூரும் முகமாக இருபத்தைந்து பேர்கள் எழுதியுள்ள நினைவுக் குறிப்புகளின் வரலாற்றுப் பதிவு  இந்த நினைவு நூல்