பயிரை மேய்ந்த வேலிகள்..(20)

(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)

2006 ஜூன்/ ஜூலை மாதங்களில்மண்வெட்டி பிடிகளுடன்தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கானமுதலுதவி மற்றும் தலைமைத்துவஉடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால்மண்வெட்டி பிடிகளுக்குபதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்சியாக மாறியிருந்தது.

உலகிலேயே தாக்குதல் துப்பாக்கியை வைத்து முதலுதவி செய்வது எப்படி என்று கற்றுக்கொடுப்பவர்கள் புலிகளாகத்தான் இருக்க வேண்டும் என இதனை கேள்வியுற்ற கிளிநொச்சியில் இருந்த .நா அதிகாரி ஒருவர் தனது உதவியாளரிடம் அப்போது கூறியிருந்தார்.

அவ்வாறு ஆயுத பயிற்சியை பெற்றுக்கொள்ளாதவர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு செல்ல முடியாது என கூறப்பட்டனர். அத்துடன் தங்கள் கல்வி நடவடிக்கைகளை பாடசாலையிலும் தொடரமுடியாத சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டது. பயிற்சி அட்டை வைத்திருக்காத எவரும் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கண்டிப்புடன் கூறப்பட்டது.

வேறு வழியில்லாமல் பலியாடுகள் போன்று பேரூந்துகளில் ஏற்றப்பட்டு கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்கள் புலிகளின் ஆயுத பயிற்சி முகாம்களுக்கு சென்று இறங்கியிருந்தனர்.சுமார் 200 பேரளவிலான முல்லைதீவு மாணவர்கள் புலிகளின் இரண்டு பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்டு நாவற்காட்டு பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து தொலைவில் இருந்த பயிற்சி முகாமுக்கு நடந்து செல்லுமாறு கூறப்பட்டது. மிகப்பெரிய காட்டினூடாக நடந்து சென்ற மாணவர்கள் இறுதியாக பயிற்சி முகாமை சென்றடைந்த போது மாலை 5.00 மணியாகியிருந்தது.

முல்லைத்தீவின் ஏனைய பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் ஏற்கனவே அங்கே வந்திருந்தனர். அவர்களுடன்காளி மாஸ்டர்என அழைக்கப்பட்ட புலி உறுப்பினரும் இருந்தார். இவர்தான் இந்த மாணவர்களுக்கான ஆயுத பயிற்சியை வழங்க இருப்பவர் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள நீண்ட நேரம் எடுக்கவில்லை.

எல்லோரையும் வரிசையில் நிற்குமாறு பணித்த காளி மாஸ்டர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனது நீண்ட எழுச்சி உரையை தொடங்கியிருந்தார். இன்றிலிருந்து நீங்களும் எங்களை போன்று போராளிகளே என உரையை தொடங்கிய காளிமாஸ்டர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். பீதியில் உரைந்து போன மாணவர்கள் அவர் பேச்சை முடிக்கும் போது ஆச்சரித்துடனும் இருந்தனர். காளி மாஸ்டர் தனது பேச்சின் இறுதியில் கொடுத்த விளக்கமே அந்த ஆச்சரியத்துக்கு காரணம். “புலிகள் தான் தமிழர்கள். தமிழர்கள்தான் புலிகள் எனவேதான் நாங்கள் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறுவதில்லை.” எனக்கூறி பீதியில் உறைந்து போயிருந்த மாணவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த காளிமாஸ்டர்புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்எனக்கூறி தனது நீண்ட உரையை முடித்திருந்தார்.

அன்று அந்த நீண்ட எழுச்சி உரையை நிகழ்த்திய காளி மாஸ்டர் பின்னாட்களில் வவுனியாமெனிக் பாம்இடைத்தங்கல் முகாம்களில் இராணுவ புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து புலிகளை பிடித்து கொடுப்பதில் புத்தெழுச்சியுடன் செயற்பட்டதை கணட முல்லைத்தீவு மாணவர்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டனர். காளி மாஸ்டரின் எழுச்சி உரை இப்போது அவர்கள் நினைவில வந்து போவதை தவிர்க்க முடியாமல் இருந்தது.

காளி மாஸ்டரின் நாவற்காடு பயிற்சி முகாமில் முதல்நாள் பயிற்சி எதுவும் வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு உணவாக கஞ்சி வழங்கப்பட்டது. முதல்நாள் சாதுவாக தென்பட்ட காளிமாஸ்டர் அடுத்தநாள் தனது புலிமுகத்தை காட்டினார். கட்டாந்தரையில் கிடங்கு வெட்டி பனைமரங்களை தறித்துவந்துபங்கர்கள்அமைக்குமாறு கட்டளையிட்டார்.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாணவர்கள் ஏனைய இலங்கை மாணவர்களை போன்று வைத்தியர், பொறியியலாளர், கனவில மும்முரமாக பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்த அதே நேரம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியாவடக்கு, மன்னார் மாந்தை மாணவர்கள் உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுக்காவும் இராணுவகட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்காகவும் தமிழீழ சுதந்திர நாட்டை அமைக்க ஆயுத பயிற்சிக்கு நிர்பந்திக்கப்பட்டு பங்கர் வெட்டும் வேலையை செய்யுமாறு அடித்து உதைக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

உல்லாச வாழ்க்கையில் திளைத்திருந்த புலிகளின் மேல் மட்டத்தினரும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் கருணாவின் பிளவினால் ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறையை இந்த மாணவர்களை கொண்டு ஈடுகட்டிய மகிழ்ச்சியில் ஏற்பட்ட புத்துணர்வுடன் இயங்கிக்கொண்டிருந்தனர்.

முல்லைதீவு மாணவர்கள் நாவற்காட்டு பயிற்சிமுகாமில்பங்கர்அமைக்க பயிற்சி பெற்ருக்கொண்டிருந்த அதே வேளை கிளிநொச்சி மாணவர்கள் வட்டகச்சி பண்ணையிலும் மாணவிகள் புதுகாட்டு பயிற்சி முகாமிலும் புலிகளுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தனர்.

வள்ளிப்புனம் பயிற்சி முகாமில் கொண்டு சென்று விடப்பட்ட முல்லைத்தீவு மாணவிகள் ( இன்றைக்கு சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு) 2006 ஆகஸ்ட் 10 காலை 7.30 மணிக்கு முற்றத்தில் ஒன்றுகூடி புலிகளின் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் எழுச்சி உரையைத்தொடந்து இன்னும் நான்கு நாட்களில் காலன் தங்கள் மீது நடத்த போகும் கோர தாண்டவத்தை அறியாமல் மௌனமாக T-56 தாக்குதல் துப்பாக்கிகள் சகிதம் தங்கள் முதல்நாள் பயிற்சியை தொடங்க ஆயத்தமாகினர்.

(தொடரும்..)

(Rajh Selvapathi)