பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 18 )

பற்குணம் நிர்வாக சேவைப் பயிற்சிக்காக மட்டக்களப்புக்கு போனார்.அங்கே இவரது பாடசாலைக் கால நண்பர் கதிர்காமநாதன் கிளாக் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இவர் உயர்சாதி எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்.படிக்கும் காலத்தில் சாதிபாகுபாடுகளை வெறுத்தவர்.எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோவார்.

பற்குணம் அவருக்கு தான் வருவதை அறிவித்தார்.இங்கே கதிர்காமநாதன் ஒரு பரீட்சை செய்யவிரும்பினார்.அவருடன் அறையில் தங்கியிருந்த நபர் எமது ஊரவர்.அவரது உறவினர்.ஆனால் அவர் ஒருபோதும் பற்குணம் தன் நண்பர் என சொன்னதில்லை. காரணம் அவர் பற்குணத்தைப் பற்றி சிலவேளை தவறாக கதைப்பதை விரும்பவில்லை.ஏனெனில் அவர் சாதிப்பாகுபாடு பார்ப்பவர்.நமது ஊரைச் சேர்ந்த சீனிவாசகம் என்பவரின் மகன்.அவரின் தொழில் ஆசிரியர்.

அவரிடம் கதிர்காமநாதன் என் நண்பன் ஒருவன் டி.ஆர்.ஓ. பதவிக்கு பயிற்சிக்கு வருகிறான்.அவன் இங்கேதான் தங்குவான்.நானில்லாத வேளை வந்தால் அவரை வரவேற்கவும் என சொல்லிவிட்டு போய்விட்டார்.இந்த விபரங்கள் பற்குணத்துக்கு தெரியும்.ஆனால் கதிர்காமநாதனின் நோக்கம் பற்குணம் நன்கு படித்தவர்.இப்போது உயர்பதவி வகிக்கப் போகிறார். அவரின் ஊரவர்.எப்படி பற்குணத்துக்கு மரியாதை கொடுக்கிறார் என்று பார்ப்பதே.அவருக்கும் பற்குணத்தை தெரியும் .வருபவர் பற்குணம் என்று தெரியாது.

பற்குணம் அவரது அறைக்குப் போனார்.பற்குணத்தைக் கண்ட அவர் டேய் நீயா.நான் யாரோ என நினைத்தேன்.என ஒருமையில் சாதிவெறியை வெளிப்படுத்தி அழைத்தார்.இதை உணர்ந்த பற்குணம் ஓமடா மச்சான் நான்தான் .ஏன் கதிர்காமநாதன் சொல்லவில்லலையா எனக் கேட்டார்.அவருக்குப் பிடிக்கவில்லை .அவர் உடனே வெளியே போய்விட்டார்.அதன் பின் கதிர்காமநாதன் வந்து விசாரித்தார்.இருவரும் நகைச்சுவையுடன் இதைப் பகிர்ந்து கொண்டனர்.

மறுநாள் பற்குணம் தன் வேலைக்குப் போனபின் இவன் யாரென்று தெரியுமா.சாதி தெரியுமா என கதிர்காமநாதன் அவர்களிடம் கேட்டார்.அவரும் அவர் பேச்சுக்கு தலையசைத்துக் கேட்டார்.

மறுநாள் பற்குணத்திடம் கதிர்காமநாதன் அவர் கதைத்த விசயத்தை சொல்லி குறிப்பிட்ட வீதியில் வைத்து மறித்துக் கேள். கை மட்டும் வைத்திடாதே என எச்சரித்தார்.

பற்குணமும் அப்படியே வழிமறித்து அவரைக் கேட்க வாக்குவாதம் முற்றியது. சிலர் வந்து அவரைதல் தாக்கி உன் யாழ்ப்பாண புத்தியை இங்கே காட்ட வேண்டாம் என எச்சரித்தனர். அதை ஏற்பாடு செய்தவர் கதிர்காமநாதனே.பின்னர் அவர் தன் அறைக்கு வேகமாகப் போனார்.கதிர்காமநாதன் அவரின் உடமைகளை தூக்கி எறிந்து அவரை விரட்டிவிட்டார்.பற்குணம் நண்பனை நினைத்து பெருமிதம் கொண்டாலும் வெளியேற்றப்பட்ட துரை என்பவரை நினைத்து நண்பனிடம் வாதாடினார்.அவர் விட்டுக்கொடுக்கவில்லை.நீ இவ்வளவு படித்து உயர்ந்தும் உன்னை மதிக்கத் தெரியாத அவன் தேவை இல்லை என்றார். உயர்ந்த சாதியில் பிறந்த எல்லோரும் சாதிவெறியர்கள் அல்ல.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)