புலிகளின் அறிவுறுத்தலினபடி தேர்தல் விஞ்ஞாபனம்

2004 ம் ஆண்டு தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபணத்தை வெளியிடுவதற்கு சம்பந்தன் தலைமையில் சு.ப தமிழ் செல்வனை கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நடுவப்பணியகத்தில் சந்தித்து அவர்களின் அறிவுறுத்தலின் அங்கீகாரத்தின் பின்னரே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. சம்பந்தன் புலிகளின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளாக எவ்வித மறுப்புமின்றி தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபணமாக வெளியிட்டவர்கள் எப்படி தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கமுடியும். எப்படி அப்பாவி மக்களின் உயிர்க்களை காவு கொண்ட புலிக்கொடூரங்களை கண்டித்திருக்க முடியும்.

அதே காலகட்டத்தில்தான் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் கவ்சல்யனை கொக்காடிச்சோலையில் சந்தித்து பேசிய மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஜோசெப் பரராஜசிங்கம் புலிகளை ” 1977 ஆம் ஆண்டில் பெற்ற பொதுத் தேர்தல் எவ்வாறு தமிழ் ஈழம் என்ற ஆணைக்கு சர்வஜன வாக்கெடுப்பு போன்று அமைந்ததோ அதே போன்று விடுதலை புலிகளோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கூற்றுக்கு ஆணைஏறும் ஓர் சர்வஜன வாக்கெடுப்புப் போன்று இத்தேர்தல் அமைய வேண்டும்” என்று போற்றிப் புகழ்ந்தார் என்பதனை மீட்டுப்பார்த்தால் கூட்டணியே புலிகளின் குரலாக இருந்து பொது நியாயங்களை, பிற சமூக மனித உரிமைகளை, தமது சொந்த சமூக மாற்றுக் கருத்தாளர்களை மறுதலித்துள்ளனர்.

அவரை (பரராஜசிங்கத்தை ) வெட்டி விலத்தியதன் மூலம் தமிழ் மக்களை வெட்டி விலத்தியதாக அவர்கள் நினைத்தார்கள். என்னுடைய தந்தை எப்பொதுமே புலிகளின் குரலாகவும் தமிழ் மக்களின் குரலாகவும் இருந்துள்ளார். ஜொசெப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் இலண்டனிலே தனது தனது தந்தையின் இரங்கலுரையில் குறிப்பிட்டது புலிகள் குரலாக பராரஜசிங்கம் செயற்பட்டதற்கு பகிரங்க ஒப்புதலாகும்

(Bazeer Seyed)